ஐந்து வருடங்களுக்கு முன்பு , இந்த அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்து , உன்னை முதன் முதலாக பார்த்த காட்சி இன்னும் என் நெஞ்சில் பசுமையாய் ! வாசலருகே ,நீ எங்கோ தொலைவிலிருந்து திரும்பியவள் போன்ற விந்தைப் பார்வையால் என்னை பார்த்தபோதுதான் இந்த காதல் வந்தது. இது சொல்லாமல் வந்த காதல் ! எனக்கே தெரியாமல் வந்த காதல் ! என்னுள் ஒரு விதை விழுந்து ,முளைத்து ,செடியாகி,விருட்சமாகிப் போனது.
உறக்கம் வராது தவித்த இரவுகளில் , நீ கனவில் வர ஆரம்பித்தாய் ! மனசும்,உடம்பும் சிலிர்த்துப் போனது.
இது பச்சை துரோகம் ! பிறன் மனைவிஉடன், கனவில் டூயட் பாடும் வக்கிரம். பாலகுமாரனின் எழுத்தைப் போல வெள்ளப் பிரவாகமாய் காமம் வந்தது . கனவுகளில் திருட்டுத்தனமாக வாழ்ந்தாயிற்று .
இத்தனை வயசுக்கு மேல் இது என்ன கண்றாவி ? மனசும், உடம்பும் சேர்த்து பாடாய் படுத்தும் பாடு ! முடியவில்லை.
நாற்பது வயதிற்கு மேல் காதலா? அபத்தமாகப் படவில்லையா ? எனக்கு அப்படித் தோன்றவில்லை . என் காதல் நியாயமாகத்தான் பட்டது .


No comments:
Post a Comment