Search 2.0

Followers

Blog Archive

Saturday, July 26, 2008

கானல் நீர் கனவுகள் 1

அதுவும் மனம் கவர்ந்த பெண்ணின் கூந்தலில் உள்ள மல்லிகையின் வாசம் ஆளையே வீழ்த்தி விடும். மல்லிகை மோகத்தின் ஊற்று ! காமத்தின் திறவுகோல் ! மொட்டை மாடி, கயிற்றுக் கட்டில் , பௌர்ணமி நிலவு,மனம் கவர்ந்த பெண் , மல்லிகை வாசம் - இப்படி கற்பனை செய்துகொண்டே போனால் அது தமிழ் சினிமா !
எதுவும் செய்ய முடியாமல் அப்படியே உட்கார்ந்திருந்தேன் . எழுந்து வீட்டுக்கு போகலாம். போய் என்ன செய்யப் போகிறேன் ? என் மகளைத் தவிர ,மனைவி,மகனுடன் பேச்சே இல்லை . மீறி எதாவது பேச நேர்ந்து விட்டாலோ , வார்த்தைகள் தடிமனாகி சச்சரவில் முடியும். அந்த இரு ஜென்மங்களின் உறவே வேண்டாம் என்று கதவை இழுத்து சாத்திக் கொண்டு நீண்ட வருடங்களாயிற்று !
மகளுக்காகதான் வீட்டுக்குப் போக வேண்டும் . இப்போது அவள் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருப்பாள் . டி.வி பார்க்க முடியாது . எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையை தொடர வேண்டும் . அதுவும் கொஞ்ச நேரம்தான். கடனே என்று வேண்டா வெறுப்பா சாப்பிட்டு விட்டு ரூமில் போய் முடங்கி விடவேண்டும் .
இதுதான் வாழ்க்கை ! கணவன், மனைவி உறவு அர்த்தமற்றுப் போன வாழ்க்கை ! எப்போது இந்த பந்தத்தை உதறி போடுவோம் என்று துடிக்கும் நிலை ! வெறும் சம்பிரதாயதிர்க்காகவும் ,சமுதாயதிர்க்காகவும் வாழ்கின்ற நிர்பந்தம். முக்கியமாக என் மகளுக்காக மட்டுமே உயிரை கையில் பிடித்துக் கொண்டு , மரியாதை கெட்ட உறவுகளுடன் , நாலு சுவற்றுக்கிடையில் கூனி,குறுகி வாழ்கின்ற நிலை ! மேற்கொண்டு நினைக்கவே மனம் கசந்தது .
கனவுகள் தொடரும் ............

No comments: