"முதல் பார்வையில் காதல் பிறக்கவில்லையானால் ,பிறகு என்றுமே பிறக்கப் போவதில்லை " என்ற கலீல் கிப்ரானின் கவிதை வரிகளை நாட் குறிப்பில் எழுதி வைத்துக் கொண்டேன் .
தினமும் உன்னைப் பார்க்கையில் புதுப்பிக்கப் படுகின்ற காதல் உணர்வுகள் , மாலையில் மங்கிப் போய்....எனக்குள்ளே அந்த காதலை பூட்டி வைத்து,யாரிடமும் சொல்ல இயலாமல் , உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு , வேதனையையும் , கண்ணீரையும் சுமந்து கொண்டு ... இதுவே வாடிக்கையாகிப் போய்விட்டது . எப்படி இப்படி இருந்தோம் என்று புரியவில்லை . அந்த மாதிரி கிட்டத் தட்ட ஐந்து வருடங்கள் இருந்திருக்கிறோம்.
எதை எதையெல்லாமோ , துருவித் துருவி ,ஆராய்ந்து ,படித்துப் பார்த்த எனக்கு ஒரு பெண்ணின் பார்வையை புரிந்து கொள்ள முடியாமற் போயிற்றே ! ஏன்? நான் மீண்டும்,மீண்டும் நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புகிற ,அந்த சமூக பார்வை மட்டும் தானோ ? வாதப் பிரதிவாதங்களுக்குள் போய்விடாமல் அபூர்வமாக மலர்ந்தது இந்த காதல் ஒன்றாகத்தான் இருக்க முடியும் ! இது படுத்துகின்ற பாடு ! மீள முடியாத அவஸ்தை ! இந்த காதல் கை கூடுமோ ? தெரியவில்லை !
எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு ,கிளம்புகையில் அலுவலக காவலர் வந்தார் .
"என்னங்க ராமசாமி ?"
"மேடம் உங்களை கூப்பிடுறாங்க சார் "
"மேடமா ? யாரு ?" என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தேன் . வாசலுக்கு முன்னால் சோடியம் விளக்கின் மஞ்சல் வெளிச்சத்தில் பூச்சிகள் குவியலாய் பறந்து கொண்டிருந்தன .
....கனவுகள் தொடரும்


No comments:
Post a Comment