Search 2.0

Followers

Friday, September 19, 2008

கானல் நீர் கனவுகள் -1

"இல்லே" ! வீட்ல அம்மா மட்டும்தான் இருக்காங்க "
"உங்க கணவர் ?"
"இல்லே "
"குழந்தைங்க ....?"
"இல்லே "
எனக்கு ஒன்றும் புரியவில்லை ! உன்னையே உற்றுப் பார்க்க , என் பார்வையை தவிர்க்க முயலுகிறாய் .
"சரி, டாக்டர் கிட்ட போறதை விட்டுட்டு ...இங்க என்ன வேலை ?"
என் குரலில் இருந்த உஷ்ணம் உன்னை எதோ செய்திருக்க வேண்டும் . என்னை ஏறெடுத்து பார்க்கிறாய் . கண்களில் நீர் குளம் கட்டித் தளும்புகிறது . ஒரு இயலாமையும் , காய்ச்சலின் வேதனையும் உன் முகத்தில் ! எதோ சொல்ல நினைக்கிறாய் போலும் . சொல்ல முடியாமல் , உள்ளுக்குள்ளே அமுக்கி வைப்பது தெரிகிறது . உனக்கு உதவி செய்ய வேண்டும்.
"எழுந்திருங்க . டாக்டர் கிட்ட போலாம் "
எழுந்து நிற்க முயலுகிறாய் . முடியவில்லை .
"ஆபத்துக்கு பாவம் இல்லை ...என் கையை பிடியுங்க . உங்க பையை என்கிட்டேகொடுங்க ...கொடுங்க சொல்றேன் ..."
உன் கை பையை மாட்டிக்கொண்டு ,கைத்தாங்கலாக உன்னை வெளியே அழைத்து வந்து ,ராமசாமியை அனுப்பி ஒரு ஆட்டோ கூட்டிட்டு வரச் சொன்னேன் .
"என்னால நிக்க முடியலிங்க "
"என்னை பிடிச்சுக்குங்க ...பரவாயில்லே "
ஆட்டோ வர ,மெல்ல உன்னை ஏற்றிவிட்டு ,பக்கத்தில் அமர்ந்தேன் .
"ரொம்ப நன்றிங்க ராமசாமி "
"பரவாயில்லே சார் "
வண்டி செல்லும் வேகத்தில் அடிக்கும் காற்று ! உனக்கு குளுருகிறது போலும் !
"என் மேலே சாஞ்சுக்குங்க " என்று உன் அருகில் நெருங்க, நீ என் மேல் சாய்ந்து கொள்ள , உன் சுவாசம் நெருப்பென கொதிக்கிறது .
"ஏன் சார் ? தெரியாமத்தான் கேட்கறேன் ...பெண்டாட்டிக்கு இவ்வளவு உடம்புக்கு முடியலே ....ஆப்பீசுக்கு அனுப்பறியே சார் ?"
ஆட்டோ ஓட்டுனர் திரும்பி பார்த்து கேட்கிறார்.
பதில் சொல்ல முடியவில்லை.


No comments: