Amazon Contextual Product Ads

Followers

Blog Archive

About Me

disciplined, hard working, God feared,lovable,calm

Saturday, October 31, 2009

கானல் நீர் கனவுகள் - 1

"அப்படியா ? ரொம்ப நன்றிங்க ! லேட்டாகுதேனு பயந்துகிட்டே இருந்தேன் " என்றார் அம்மா .
"நூத்தியொரு டிகிரி காய்ச்சல் இருக்குங்க ! இந்த பாக்கெட்ல டேப்லெட் இருக்கு. டாக்டர் எழுதி கொடுத்திருக்கிறார் . டெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கார் . காலைல ஒன்பது மணிக்கு போகணும் " என்றேன்.
"உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலே ! ஆம்பளை இல்லாத வீடு இது "
கண் கலங்குகிறது !
என்ன இது ? ஒன்றும் புரியாமல் உன்னைப் பார்க்க , உன் விழிகளிலும் சோகம் !
"ஒரு நிமிஷம் வந்துடறேன் ...வாங்கம்மா " என்று அம்மாவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்கிறாய் .
அந்த வரவேற்பு அறையின் சுவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வர்ணம் தீட்டிய ஓவியங்கள் ! ஒரு நீர்பரப்பின் மீது ஒரு ஜோடி பறவைகள் பறந்து செல்லும் ஓவியம் . பின்னனியில் சூரியன் மறையும் ஆரஞ்சு வண்ணம் கலந்த செவ்வானம் !
டிவியின் மீதுள்ள போட்டோ ப்ரேம்மில் நீயும் உன் குழந்தைகளும் ! அழகான புன்னகையை சிந்திக்கொண்டிருக்கிறாய் !
ஆம்பளை இல்லாத வீடு ! உன் அம்மா சொன்னது காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது . உன் கணவர் எங்கே ? போட்டோவில் கூட இல்லையே ? ஏன் ? சுற்றும் முற்றும் பார்க்க , வேறு எந்த போடோக்களும் இல்லை !

கானல் நீர் கனவுகள் - 1

"இதோ வந்துட்டேன் " என்று குரல் கேட்டது .
"அம்மா வராங்க " என்கிறாய் .
கதவை திறந்த அந்த அம்மாவின் முகத்தில் பதற்றம் .
"ஏன் ? என்னாச்சும்மா ?"
"ஒன்னும்மில்லம்மா...லேசான காய்ச்சல் "
"காய்ச்சலா ? டாக்டர்கிட்ட போனியா ?...இவங்க ....? " என்று கேள்வியும் கவலையுமாக என்னை பார்க்கிறார்.
"நான் சொன்னேனே ? அவங்கதான் ...வாங்க ! உள்ள வாங்க "
உள்ளே போனால் ஒரு சிறிய நடை . அந்த இடத்தில் டு வீலர்கள் நிறுத்திக் கொள்ளலாம் . பக்கத்தில் மாடிப் படிகள் மேலே போகிறது.
"பார்த்து எறுங்க" என்கிறேன் .
"என்னை பிடிச்சுக்கம்மா" என்கிறார் அம்மா.
"இல்லம்மா ! நான் வந்துடறேன் ...வாங்க "
மேலே போனோம் .
"உட்காருங்க " என்று என்னை சோபாவில் அமர சொல்கிறாய் .
"அம்மா ...இவங்க தான் என்னை டாக்டர் கிட்ட அழச்சிட்டு போனாங்க "

Friday, October 30, 2009

கானல் நீர் கனவுகள் - 1

குறுகலான சாலை ! ஒரு புறம் பள்ளிக்கூட சுற்று சுவர், மறுபுறம் நெருக்கமான வீடுகள் .
"இதோ இங்கதான் ...வலது பக்கம் அந்த மாடி வீடு " என்று படுத்திருந்த நீ எழுந்து கொள்கிறாய் .
ஆட்டோவை அனுப்பிவிட்டு , மெல்ல இறங்கி நடக்க , பக்கத்து வீட்டின் கதவுக்கு அப்பாலிருந்து அல்சேஷன் நாய் ஒன்று கர்ண கடூரமாக குறைத்தது .
"வாங்க ! இதுதான் வீடு "
வாசல் கதவின் பெல்லை மெல்ல அழுத்துகிறாய் !

FINANCIAL IDEAS - ACROSS ALL AGES

SINGLE AND ESTABLISHED
Your mid to late 20s are your prime earning years. This is also a potential minefield, because you have plenty of money and no real responsibilities. Your best bet is an automatic savings programme, where a specified amount is swept in to an investment plan before you lay hands on it. Continue your earlier savings and investment habits, and think of taking life insurance if you plan to start a family. If you must borrow, do so for buying things with long-term value.

ESTABLISHED WITH A FAMILY
Marriage, family, added reponsibilities. Even as your income rises, so do expenses. Chances are that you'll start your own family. Start saving for your child's education, and also plan for a home of your own. Consider an asset allocation strategy that matches your risk tolerance. This is also when you will need to insure your life so your financial dependents do not suffer; also beef up your medical cover.

Thursday, October 29, 2009

FINANCIAL IDEAS - ACROSS ALL AGES

BEST LAID PLANS
Proper planning across different life stages can make all the difference when it comes to meeting your financial goals. Here's how you can avoid delays and breakdowns.
Footloose Single
It's possibly the best time of your life--money coming in and no responsibilities. It's also the best time to start saving and planning for the rest of your life. Establish sound financial habits early on and you can rest easy as you head closer to retirement. Start saving and investing wisely to take advantage of the power of compounding. Set yourself savings goals to give you motivation to put away a specific sum every month. Control your borrowing, and curb pprofligate use of credit cards. And finally, make sure you take some medical insurance--this is when premiums will be low and cover high.
Presented by bharti AXA life indusrance

Monday, October 19, 2009

FINANCIAL PLANNING

PLAN FOR YOUR RETIREMENT
All you want in your golden years is a serene and carefree life. You can make sure that your retired life is comfortable by planning meticulously and through disciplined investing. Here is a primer on what you can do and what you should avoid in the present to make your future financially secure.
LIFE INDUSRANCE CORPORATION OF INDIA.

Friday, October 16, 2009

RETIREMENT:The World's Best Job

Retirement does not mean the end of all good things in life. Plan smartly, and it could be the beginning of the best phase of your life.
We all love to complain about our stress-filled workdays and dream of the day we can hang up our boots and sink into a hammock, with the most serious decision being whether to read a book or watch a movie. But most of us also enjoy our work and the benefits that it brings-the pay, ofcourse, plus the satisfaction of successfully solving problems, the buzz and excitement at the beginning and end of projects, the competition, the workplace camaraderie. What happens to all these when you retire? It doesn't have to end.

Thursday, October 15, 2009

Business Opportunities

Dear Friends,
I have been seeing some good results from my new home business...thought you might be interested in checking this out as a possible business of yours.

Wednesday, October 7, 2009

கானல் நீர் கனவுகள் - உருவான விதம்

இன்று கூட கண்கள் தேடின ! மாலை வரை தென்படவில்லை . மாலை பார்க்க முடிந்தபோது , உடலை இறுக்கி பரவியிருந்த அந்த பிஷப் கலர் சேலையில் - மனதை நோகச் செய்தது ! மனசு இன்னும் இளமையாய் இருக்கிறதே ! பார்த்தவுடன் வார்த்தைகள் சரளமாக வருகிறதே ? ஏன் ? மனதை ஈர்த்த பாடல் காட்சிகள் உள்ளே புகுந்து பிரம்மிக்க வைத்து விடுகிறதே ! அது ஏன் ?
"வருது வருது இளங்காற்று
இந்த வசந்த மலரின் இடம் பார்த்து "
கற்பனை குதிரை பறக்கிறது ! வானத்து நட்சத்திரங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் ! ஒரு தங்க ரதம் அசைந்து வந்து வசந்தம் வீசுகிறது ! அந்த சேலையின் ஸ்பரிசம் ...மின்னல் கீற்றுகளை அள்ளி இறைக்கிறது ! இதழ்களில் தென்படும் மெல்லிய ஈரம் லட்சக்கணக்கான நரம்புகளில் வீணை மீட்டுகிறது ! எனக்கு என்ன ஆயிற்று ?

Tuesday, October 6, 2009

கானல் நீர் கனவுகள் - 1 - உருவான விதம்

"முதல் பார்வையில் காதல் பிறக்கவில்லையானால் பிறகு என்றுமே பிறக்கப் போவதில்லை " கலீல் கிப்ரானின் வார்த்தைகள் ! தாம்பத்தியத்தில் நுழையும் முன்னே என்னை ஈர்த்த வார்த்தைகள் ! அது போலத்தான் இதுவும் .
பார்த்தவுடன் உள்ளத்தை சலனப்படுத்தும் ஒரு அழகு ! எப்போது பார்த்தாலும் ஒரு துய்மை ! கண்களில் ஒரு வெளிச்சம் ! இதழ் ஓரங்களில் லேசாக ஒளி விடும் ஒரு கீற்று புன்னகை ! பளீரென்று - அப்போதுதான் மலர்ந்த மலர் போல ! பொதுவாக வர்ணிப்பது என்பது ஒரு சதவிகிதம் அதிகம்தான் ! இருப்பதை சற்று மிகைப்படுத்தி காட்டுவது என்பது கூட ஒரு கலைதான் ! இருந்தாலும் இதை செய்ய தூண்டுவது கூட அந்த அழகுதான் ! எல்லாமே இந்த உலகில் மாயை என்றாலும் இது மனதை பாதித்த நிஜம் !

Monday, October 5, 2009

கானல் நீர் கனவுகள் - உருவான விதம் 1

ஆழ்ந்த உறக்கம் ! ஆனாலும் கனவுகள் இலவசம் ! ஆஸ்திரியாவை சேர்ந்த சிக்மன்ட் ப்ராஇட் என்ற மனோதத்துவ நிபுணரின் கண்டுபிடிப்பு , தூக்கத்தில் தோன்றும் கனவுகள் பற்றி மனிதனுக்கு இருந்த பல சந்தேகங்களுக்கு விடை சொன்னது ! மனிதனின் ஆசை அல்லது பயம் - இவைதான் அவன் தூங்கும்போது கனவாக வெளிபடுகிறது என்பது இவரின் கண்டுபிடிப்பு !
இது என்ன ? ஆசையா? கால்ப் லவ் என்றுஆங்கிலத்தில் சொல்லுவார்கள் . அது இளம் வயசில் வரும் ! இரண்டும்கெட்டான் என்ற பருவம் ! ஆனால் இது என்ன ? இத்தனை வருடங்களுக்கு பிறகு ? இப்படி ஒரு தூண்டுதலை கொடுத்தது யார் ? சாத்தான் என்று வேதம் சொல்லும் !